விவசாயிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு.! வெளியான புதிய உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


வெங்காய விலையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு விவசாயிகளின் கையிருப்பு அளவை பாதியாக குறைத்து புதிய உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது. 

தொடர்ந்து உற்பத்தி குறைபாடு காரணமாக வெங்காய விலையானது ஏறி வருகின்றது. வெங்காய விலையை கட்டுப்படுத்த, வெங்காய தட்டுப்பாட்டை குறைக்க வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வெங்காயம் விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வெங்காயம் விலையானது குறைந்தபாடில்லை.

Image result for onion seithipunal

இந்நிலையில், வெங்காய விலையை கட்டுப்படுத்த நுகர்வோர் விவகாரத்துறை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி விவசாயிகள் விதைப்பதற்காக வைத்துக்கொள்ளும் வெங்காய இருப்பு அளவு 10 டன்னிலிருந்து, 5 டன்கள் ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மொத்த விலை வெங்காய வியாபாரிகள்ன் கையிருப்பு அளவானது, 50 டன்னில் இருந்து 25 டன்கள் ஆக குறைக்கப்பட்டு இருக்கின்றது. நேற்று முதல் இந்த கையிருப்பு அளவானது, அமலுக்கு வந்து இருக்கின்றது. ஆனால், இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு இந்த கட்டுப்பாடானது பொருந்தாது என்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

consumer protection department new announcement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->