ஓசூரில் பரபரப்பு... சிப்காட்டுக்கு எதிராக போராடிய காங்கிரஸ் எம்.பி கைது...!! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய மூன்று ஊராட்சிகளில் 3,034 ஏக்கர் நிலப்பரப்பில் 5வது சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையப்படுத்தும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 14வது நாளாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் உத்தனப்பள்ளி பேருந்து நிலையம் அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தின் பொழுது 8 விவசாயிகள் காவல் நிலையம் எதிரே உள்ள செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்பி செல்வகுமார் விவசாயிகளுடன் இணைந்து உத்தனப்பள்ளி - ராயக்கோட்டை சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பி செல்வகுமார் உடன் மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர், ஓசூர் துணை ஆட்சியர் சரண்யா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பி செல்வகுமார் மற்றும் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு 8 பேர் உட்பட 141 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் ஓசூரில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress MP protest against new sipcot near Hosur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->