காஷ்மீர் விவகாரத்தால், காங்கிரஸிலிருந்து கட்சி தாவும் மூத்த நிர்வாகி.!  - Seithipunal
Seithipunal


காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலங்களவையில் காங்கிரஸ் கொறடா பதவியில் இருந்து மூத்த தலைவர் புவனேஸ்வர் காலிட்டா விலகி இருந்தார். இன்று அவர் பாஜகவில் இணைகின்றார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான அசாம் மாநில புவனேஸ்வர் காலிட்டா கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். பின்னர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டு மாநிலங்களவை காங்கிரஸ் கொறடாவாகபதவி வகித்து வந்தார்.

ஓரிரு நாட்களுக்கு முன்னர் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு திருத்தும் குறித்த விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடந்து சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இந்த மசோதாவிற்கு காங்கிரசை சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், காங்கிரஸ் கொறடா புவனேஸ்வர் கலிட்டாவிற்கு இது பிடிக்கவில்லை. எனவே காங்கிரசின் முடிவுக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகினார். இதுகுறித்து அவர், " காங்கிரஸ் கட்சி தற்கொலை செய்துகொண்டு இருக்கிறது. இதனை அழிவில் இருந்து நீக்க வேறு வழிகள் இருப்பதாய் தெரியவில்லை. எனவே நான் பதவியில் இருந்து விலகுகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

அதன் பின் அவரது ராஜினாமாவை வெங்கய்ய நாயுடு ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் கலிட்டா இன்று பாஜகவில் இணைகின்றார். இன்னும் அதிகாரபூர்வ தகவல் ஏதும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress mp join to bjp


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->