கோவிலில் பூஜை., தொடங்கியது காங்கிரஸ்! காத்திருக்கும் பாஜக!  - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் காலியாக உள்ள 65 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை, வரும் பீகார் சட்டமன்ற தேர்தலோடு நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 27 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே நேற்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்த 27 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர்களின் 15 பேர்கொண்ட பட்டியலை நேற்றே அக்கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், அகர் மால்வா மாவட்டத்திலுள்ள பிரபல பகளாமுகி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, காங்கிரஸ் மாநிலத் தலைவர் கமல்நாத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.

இந்த இடைத்தேர்தல் குறித்து பாஜக தரப்பில் இருந்து வந்த தகவலின் படி, இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின், வேட்பாளர்களை அறிவித்து முறையாக பிரசாரத்தை மேற்கொள்ளும் என்று தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress mathya pradesh by election work start


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->