துக்ளக் இதழ் விழாவில் ரஜினி பேசியதற்கு, கோவையில் புகார்..! கொந்தளிக்கும் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் துக்ளக் இதழுடைய 50 ஆவது வருட விழா நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். பின்னர் துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவிற்கான மலரை வெளியிட்டார். 

இந்த நிகழ்ச்சியில், துக்ளக் மலரை முதல் பிரதியாக நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மூத்த தலைவர் பொன்.இராதாகிருஷ்ணன், இல.கணேசன் மற்றும் த.மா.கா கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் ஆகியோர் பங்கேற்றுக்கொண்டனர்.  

இவ்விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசிய சமயத்தில், மக்களுக்கு சேவை செய்யும் பணி என்பது தந்தைக்குரிய பதவியாகும். இந்த மாபெரும் சேவையினை தொடர்ந்து செய்து வரும் துக்ளக் இதழை சிறப்பாக செயல்படுத்தி குருமூர்த்தி வருகிறார். சோ மிகச்சிறந்த அறிவாளி ஆவார். அறிவாளியை தேர்ந்தெடுக்கவே பத்திரிகை துறை இருந்து வருகிறது. 

சோ எடுத்த ஆயுதமே துக்ளக். சோவின் மறைவிற்கு பின்னர் துக்ளக் பத்திரிகை நடத்துவார்கள் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். துக்ளக் இதழையும், சோ ராமசாமியையும் பெரிய அளவில் பிரபலமாக்கிய நபர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பகத்வத்சலம். முரசொலியை பொறுத்த வரையில் முரசொலி என்று கூறினாலே திமுக காரன் என்பார்கள். 

துக்ளக்கை வைத்திருந்தால் அறிவாளி என்று கூறுவார்கள்.. பெரியாரின் தலைமையில் ராமர் மற்றும் சீதாவின் உருவங்கள் நிர்வாணமாக சாலையில் எருது செல்லப்பட்டு ஊர்வலம் நடத்தப்பட்டது. இருவரின் சிலைக்கும் செருப்பு மாலையும் போடப்பட்டது என்று பேசினார். இதனை அறிந்த திராவிடர் விடுதலை கழகத்தினர் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில், கோயம்புத்தூர் திராவிடர் விடுதலை கலகத்தினை சார்ந்த நேருதாஸ் என்ற நபர், கோயம்புத்தூர் காவல்துறை ஆணையரிடம் மனுவை அளித்துள்ளார். இது தொடர்பான மனுவில், ரஜினிகாந்த் பெரியார் குறித்து அவதூறு பரப்பி, பெரியாரின் பேருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் பேசியதாகவும், அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது ரஜினி ரசிகர்களை பெரும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

complaint against rajinikanth about thuklak function speech


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->