தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா..? மேலும் தளர்வா..? இந்த தேதியில் அறிவிப்பை வெளியிடும் முதல்வர்..! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் காரோண வைரஸ் பரவ தொடங்கியதை அடுத்து, கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தற்போது எட்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. கடந்த மூன்று ஊரடங்குகளில் ஒவ்வொரு தளர்வாக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. 

தமிழகத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதையடுத்து, இ பாஸ் ரத்து, பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி, வழிபாடு தளங்களுக்கு அனுமதி, மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து சேவை மற்றும் ரயில் சேவைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்தது. 

இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29 ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்திய தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு வரும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் மீண்டும் அதிகரித்தால், ஊரடங்கு உத்தரவை கடுமையாக்குவதா? அல்லது மேலும் தளர்வுளை அறிவிப்பதா என்பது குறித்து வரும் 29 ஆம் தேதி முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு வரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மேலும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coming 29 cm discuss with doctors about lock down


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->