கல்லூரி மாணவ மாணவிகள் திடீர் ஸ்ட்ரைக்!  - Seithipunal
Seithipunal


டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தியும் மணல்மேடு அரசியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் 500 பேர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸ் உதவியுடன் மாணவர்கள் மீது நடைபெற்ற கொடூர தாக்குதலை கண்டித்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று கூறியும் தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிராக தீர்மானம் இயற்ற வேண்டும் என்று கோரியும் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். தொடர்ந்து கல்லூரி வாசலில் அமர்ந்து மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

செய்தியாளர் : மணிகண்டன் 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college students strike for against CAA


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->