மாமல்லபுரம் || ராட்சத அலையில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் மீட்பு.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் அருகே தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் ஏழு பேர் தனது நண்பரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மாமல்லபுரம் கடற்ரைக்கு சென்றனர். 

அங்கு கேக் வெட்டி நண்பரின் பிறந்தநாளை மிகச் சிறப்பாக கொண்டாடினார். அந்த மகிழ்ச்சியில் அங்குள்ளவர்களில் நான்கு பேர் மட்டும் கடலில் குளித்துள்ளனர். அப்போது கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் ராட்சத அலை ஒன்று வேகமாக வந்து 100 மீட்டர் தூரத்திற்கு மூன்று மாணவர்களை கடலுக்குள் இழுத்து சென்றது. அதனால் அவர்கள் மூவரும் மூச்சு திணறலால் உயிருக்கு போராடினர். 

இதை பார்த்த சக மாணவர்கள் கூச்சலிட்டதில், குதிரை சவாரியில் ஈடுபட்டிருந்த தேசிங்கு என்பவர் உடனே கடலில் நீந்தி சென்று மூன்று பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதை பார்த்த தேசிங்கின் நண்பர்கள் இருவரும் கடலில் நீந்தி சென்று தேசிங்குக்கு உதவியாக மூன்று மாணவர்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். 

கடலில் மூச்சு திணறல் ஏற்பட்டதால் மயங்கிய நிலையில் இருந்த அவர்கள் சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பினர். அதன் பின்னர் கடற்கரைக்கு வந்த மாமல்லபுரம் தீயணைப்பு துறையினர் கடலில் சிக்கி உயிருக்கு போராடிய மணவர்களை காப்பாற்றியவர்களின் மனித நேயத்தை பாராட்டினர். அதன் பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மாணவர்களை எச்சரித்து அனுப்பினார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college students rescue in mamallapuram beach


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->