ஆய்வாளர் அல்லிராணிக்கு ‘சல்யூட்’ அடித்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி! - Seithipunal
Seithipunal


கடந்த 15 ஆம் தேதி திருவண்ணாமலையில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. இதில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ், பதக்கங்களை வழங்கினார். அதில், காவல்துறையைச் சேர்ந்த 30 பேருக்கு கலெக்டர் வழங்கினார். 

குறிப்பாக ஆய்வாளர் அல்லிராணிக்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அவர்கள் சல்யூட் அடித்து மரியாதையை செலுத்தியது நெகிழ்ச்சியை உண்டாக்கியது. ஆய்வாளர் அல்லிராணி கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏரிப்பட்டு கிராமத்தில் அமாவாசை என்பவர் மின்வேலியில் சிக்கி இறந்தவரை, கொரோனாவுக்கு இறந்ததாக அவரின் உடலை கிராம மக்கள் தூக்க மறுத்தனர்.

இதனை கண்ட ஆய்வாளர் அல்லிராணி அவர்கள் களத்தில் இறங்கி, இறந்த அமாவாசையின் உடலை தூக்கி அப்புறப்படுத்தினார். இதற்காக, அவருக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை செலுத்தி உள்ளார். 

மாவட்ட ஆட்சியர் விழா மேடையில் இருந்து கீழே இறங்கி, ஆய்வாளர் அல்லிராணி அவர்கள் நின்றிருந்த இடத்துக்கு சென்று அவருக்கு ‘சல்யூட்’ அடித்து மரியாதை செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

collector salute to inspector


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->