கடலூர் : விடுப்பு இல்லை..உடனே வாருங்கள்.! மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்ட ஆட்சியர் ஞாயிறு விடுமுறையில் இருக்கும் அரசு அதிகாரிகள் தொடர் கனமழை காரணமாக உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருக்கின்றார். 

கடந்த இரண்டு நாட்களாக கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் அந்த மாவட்டத்தில் இருக்கும் பல பகுதிகளில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து இருக்கின்றது. 

இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் , "மீட்புப்பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. சுமார் 500 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருவகின்றது. தண்ணீர் சூழ்ந்து இருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

இந்த தொடர் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் - கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இந்த பாதிப்பை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது. இதுபோல கனமழை காரணமாக நெய்வேலி நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியானது பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நிலக்கரி போதுமான அளவு இருப்பு இருப்பதால் மின் உற்பத்தியில் பாதிப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

collector order to Government officers


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->