சிறார் ஆபாச படம்.. கோவை வாலிபர் கைது.. காவல்துறை அதிரடி நடவடிக்கை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி வளையபாளையம் பகுதியை சார்ந்தவர் ரங்கநாதன். இவர் அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் நிலையில், சிறுவர்களின் ஆபாச படங்களை இணையத்தளத்தில் இருந்து பதிவேற்றம் செய்தது தொடர்பாக சென்னை சைபர்கிரைம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து இது குறித்து கருத்தம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன்பின்னர் கருமத்தம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், ரங்கநாதன் சிறார் ஆபாச படத்தை வாட்சப் குழுவில் பதிவு செய்தது தெரியவந்துள்ளது.

மேலும், முகநூலில் போலி கணக்கை துவங்கி, ஆபாச விடீயோக்களை பதிவு செய்தது தெரியவந்துள்ளது. ரங்கநாதனின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில், வாட்சப் குழுவில் உறுப்பினராக இருந்த நபர்கள் குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore youngster arrest share child porn video in whatsapp


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->