கேள்வி கேட்ட பி.சி.ஆர் போட்டுடுவேன்.. ஊராட்சி மன்ற தலைவியின் பகிரங்க மிரட்டல்.!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான்பேட்டை ஜெய் கிருஷ்ணாபுரம் ஊராட்சி தலைவி சரிதா. அவரது கணவர் வீரமுத்துவும் அத்துமீறலில் ஈடுபட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. சம்பவத்தன்று ஊராட்சி அலுவலகத்திற்கு சென்ற சுப்பிரமணியம், தனது பெயரை சொல்லி திட்டியதாக ஊராட்சித் மன்ற தலைவி சரிதா தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் சுப்பிரமணியம் மீது புகார் அளித்தார். மேலும், திமுகவினருக்கு இதற்கு கொடி பிடித்தனர். 

இந்நிலையில், தனது தந்தை மீது பொய்யான புகார் அளித்துவிட்டதாக கூறி, பாலசுப்பிரமணியத்தின் மகன் குரல் பதிவு ஒன்றை வெளியிட்டார். ஜெய் கிருஷ்ணாபுரம் ஊராட்சி தலைவர் பொறுப்புக்கு புதிதாக வந்த சரிதா, அங்கு நீண்ட நாட்களாக பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்ததோடு, சில மாதங்களாக சம்பளம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். மேலும், சம்பளம் தர முடியாது என்று தூய்மை பணியாளர்களையும் மிரட்டியுள்ளார். 

தூய்மைப் பணியாளர்கள் சமூக ஆர்வலராக இருந்த சுப்பிரமணியத்திடம் இது குறித்து தெரிவிக்கவே, ஜெய் கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் பழைய பணியாளர்களை பணி நீக்கம் செய்தது ஏன்?, சம்பள நிலுவை வழங்கப்படாதது ஏன்?, என்பது குறித்த கேள்விகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பியுள்ளார். இதனையடுத்து இது குறித்து சரிதா பதில் அளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. 

இதனால் ஆத்திரமடைந்த சரிதா, தனது கணவருடன் சேர்ந்து பாலசுப்பிரமணியத்தின் வீட்டிற்கு சென்று மிரட்டல் விடுத்த நிலையில், சுப்பிரமணியத்தை பலமுறை ஜாதியை கூறி திட்டிவிட்டு, திருவள்ளூரில் நடத்த சம்பவம் போல, இங்கும் நடத்தவா? என்றும் மிரட்டியுள்ளார். இந்த விஷயத்தை அறிந்த தூய்மைப் பணியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவி மற்றும் திமுகவினரின் முகத்திரையை வெளிப்படுத்தும் வகையில், ஒன்று சேர்த்து உண்மையை கூறி புகார் அளித்துள்ளனர். 

இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை பதிவு செய்துள்ள நிலையில், கொரோனா காலத்திலும் உண்மையாக உயிரை மதிக்காது களத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களின் நலனிற்காக போராடிய நபரின் மீது பொய்யாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தை திமுகவும், ஊராட்சி மன்ற தலைவியும் உபயோகம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சட்டங்கள் என்பது மக்களை பாதுகாக்க இருந்தது சென்று, இன்று பழிவாங்க உபயோகம் செய்து கொள்வதாகவும், இதனால் அராஜகம் செய்த நபர்கள் நல்லவன் போலவும், அப்பாவியாக இருந்தவர்கள் கொலையாளிகள் போலவும் சித்தரிக்கப்படுவதாகவும் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Village Administer abuse PCR Act


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->