#Breaking: கோவை, திருச்சியில் தடுப்பூசி முகாம்கள் இரத்து - மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.! தடுப்பூசி இல்லை.!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசுத்துறை உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக மருத்துவ நிபுணர்குழு அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர். 

தமிழகத்தில் ஊரடங்குகளை ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதனால் தமிழகத்தில் மேலும் ஒரு வார காலம் முழு ஊரடங்கு நீடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழகத்திலும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, தமிழக அரசுக்கு மேலும் பல சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தடுப்பூசிகளின் கையிருப்பு நிலையினை கருத்தில் கொண்டு திருச்சி, கோவையில் நாளை தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி மருந்துகள் வந்த பின்னர் மீண்டும் முகாம்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Trichy Corona Vaccination Cancelled due to No Stock of Vaccine 4 June 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->