களமிறங்கிய டிரோன்.. கிரிக்கெட் விளையாடிய இளசுகள்.. எச்சரித்து அனுப்பிய கோவை காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து அறிவுரை வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா பரவலால் அம்மாவட்ட மக்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். சென்னையை போல் அதிகபட்ச கொரோனா பரவலால் கோவை மாவட்டம் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. 

மேலும், கோவையை சுற்றியுள்ள மாவட்டங்களில் கடுமையான அளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, தினமும் அது அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இந்நிலையில், தற்போது முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். 

டிரோன் கேமரா மூலமாகவும் காவல்துறையினர் பொதுமக்கள் வீதிகளில் நடமாடுகிறார்களா? என்று கண்காணித்து வந்த நிலையில், சூலூர் சுற்றுவட்டார பகுதியில் முழு ஊரடங்கை மதிக்காமல் பலர் சுற்றி திரிவதாக புகார்கள் எழுந்தது. 

இதனையடுத்து, டிரோன் உதவியுடன் அங்குள்ள பாரதி நகர் பகுதியில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த நிலையில், அங்கு இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் மாணவர்கள் என்பது தெரியவந்த நிலையில் அவர்களை பிடித்து வரிசையாக நிற்க வைத்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Sulur Youngster Playing Cricket during Complete lockdown Period Police gives Warning 26 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->