கொரோனாவால் செப் 7-ம் தேதி வரை கடைகள் முழுவதும் அடைப்பு.! வணிகர் சங்கம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கொரோன பரிசோதனைகளை அதிகப்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சமீபத்தில் கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் செயல்பட்டு வரும் டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஊழியர்கள் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து அந்த கடையை மூடி சீல் வைத்த நகராட்சி ஊழியர்கள் கடைக்கு சென்று வந்த பொதுமக்களை கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இந்தநிலையில், கொரோனா வேகமாக பரவி வருவதால் வரும் 7-ம் தேதி வரை கடைகளை அடைக்க கோவை கிராஸ்கட் சாலை வணிகர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.  கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வணிகர் சங்கத்தினர் விளக்கமளித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coimbatore shops closed for corona


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->