அனாவசியமாக சுற்றிய புள்ளிங்கோக்கள்... கும்மியடிக்க வைத்து எச்சரித்து அனுப்பிய கோவை காவல்துறை.. வைரல் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கரோனா வைரஸின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அரசின் சார்பாக கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நேற்றுவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2,757 ஆக இருந்தது. கரோனாவால் பலியான நபர்களின் எண்ணிக்கை 29 ஆக இருந்தது. மேலும், 1,341 பேர் சிகிச்சை பெற்று பூரண நலனுடன் இல்லங்களுக்கு திரும்பினர். 

தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கரோனா வைரசால் 142 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 127 பேர் சிகிச்சை முடிந்து பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். 12 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் காவல் துறையினர் அனாவசியமாக சுற்றித்திரியும் நபர்களை கண்டறிந்து நூதன தண்டனை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், கோவை சூலூர் காவல் துறையினர் அனாவசியமாக சுற்றிய நபர்களை கும்மியடிக்க வைத்து எச்சரித்து அனுப்பியது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore police punishment violent corona virus amid


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->