கோவையில் புகார் கொடுக்க வந்த பாமக நிர்வாகிகள்! - Seithipunal
Seithipunal


வேலை இல்லா திண்டாட்டத்தில் சிக்கி தவிக்கும் இளைஞர்களைக் குறிவைத்து வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் கோவை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

பாமகவினர் அளித்த புகார் மனுவில், கோவையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பெரும் மோசடி நடந்து வருகிறது. இது காலம் காலமாக நடந்து வந்தாலும் இப்பொது மிக பெரிய அளவில் நடக்கிறது. தனி நபராக புகார் கொடுக்க வந்தால் காவல் நிலையங்களில் புகார் எடுக்கப்படுவதில்லை. இதனால் இந்த மோசடி செய்பவர்களுக்கு எளிதாக போய் விடுகிறது. கோவையில் மட்டும் பல நூறு இளைஞர்கள் லட்ச கணக்கில் பணத்தையும் தொலைத்து வாழ்க்கையை இழந்து நிற்கின்றனர். 

இதை தடுப்பதற்காக இந்த மாதிரியான புகார்களை விசாரிக்க தனி படை (special team).  புகார் அளிக்க தனி தொலைபேசி எண் (phone/whatsapp number) போன்றவை வேண்டும் எனவும், இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எளிதாக புகார் செய்ய முடியும். காவல் துறைக்கும் / அரசாங்கத்திற்க்கும் மோசடி செய்பவர்களின் தகவல் தெரிய வரும். மக்களின் நலன் கருதி இதை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்" என கூறியுள்ளார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore PMK youth wing persons gave petition to police commissioner


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->