கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணி கட்சியினர் திடீர் போராட்டம்...! - Seithipunal
Seithipunal


ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு கோவிலை இடிக்க கூடாது என இந்து முன்னணி சார்பாக போராட்டம் நடந்து வருகிறது. 

கோவை மாநகராட்சியில் உள்ள குளக்கரை அருகே இருக்கும் 6 கோவில்களை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இடிக்க கோவை மாநகராட்சி முயற்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு கொடுத்துள்ள நிலையில், இந்து முன்னணியினர் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து திடீர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

சுமார் 500 க்கும் மேற்பட்ட இந்து முன்னணி கட்சியினர் கோவையின் பிரதான பகுதியில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு, அது ஆர்ப்பாட்டமாக மாறியுள்ளது. இதனால் அங்கு காவல் துறையினருக்கும் - இந்து முன்னணியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதனையடுத்து, கூடுதல் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, இந்து முன்னணி கட்சியினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அங்குள்ள தனியார் திருமண மண்டப மஹாலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாநகராட்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Hindu Munnani Party Protest at Coimbatore Municipal Corporation Office 16 July 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->