சாப்பிட்டுக்கொண்டு இருந்த பெண்கள், உணவகம் மீது தாக்குதல்.. காவல் உதவி ஆய்வாளருக்கு கிடைத்த ஆப்பு..! - Seithipunal
Seithipunal


அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் முத்து, தனது பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறை பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உணவு கடைகள் இரவு 11 மணி வரை 50 விழுக்காடு இருக்கையுடன் மற்றும் பார்சல்கள் மூலமாக உணவு விநியோகம் செய்யும் வகையில் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில், ஓசூர் செல்வதற்காக காத்திருந்த ஐந்து பெண் பயணிகள், அவசரஅவசரமாக இறுதி சில நிமிடங்களில் கடைக்கு வந்துள்ளனர். 

மேலும், நாங்கள் ஓசூர் செல்லவேண்டும் என்பதால் அமர்ந்து சாப்பிட்டு விட்டு போகிறோம் என்று கேட்கவே, பெண்கள் என்பதால் பரிதாபப்பட்ட கடைக்காரரும் அதற்கு அனுமதித்துள்ளார். இதன்போது அங்கு வந்த முத்து என்னும் காவல் உதவி ஆய்வாளர், கைகளில் கிடைத்த பொருட்களை எடுத்து கடையை தாக்கி சேதப்படுத்தி அங்கிருந்தவர்களை அடித்துள்ளார். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான தகவல் உயர் காவல் அதிகாரிகளுக்கு சென்றுள்ளது. இதனையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் முத்துவை, கட்டுப்பாட்டு அறை பணிக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Gandhipuram Bus Stand Sub Inspector attack hotel 12 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->