சண்டையில் நெஞ்சில் இறங்கிய கத்தி... தப்பித்த பெண்மணி.. மருத்துவர்களின் தீவிர போராட்டம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் கொட்டராஜா நகர் பகுதியை சார்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி மல்லிகா (வயது 40). மல்லிகாவை கடந்த மே 25 ஆம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் 7 அங்குல நீளம் கொண்ட கத்தி, மல்லிகாவின் நெஞ்சு பகுதியில் பாய்ந்துள்ளது. 

இதனால் மல்லிகா அலறிய நிலையில், கத்தியால் குத்திய நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து மல்லிகாவை மீட்ட அக்கம் பக்கத்தினர், அங்குள்ள மருத்துவமணிக்குயில் சிகிச்சைக்காக அனுமதிக்கவே, முதற்கட்ட சிகிச்சைகள் முடிந்த பின்னர், மே 26 ஆம் தேதி கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கோயம்புத்தூர் மருத்துவமனையில் மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்க்கையில், மல்லிகாவின் நெஞ்சில் 6 அங்குல அளவிற்கு கத்தி உள்ளே இறங்கியுள்ளது தெரியவந்துள்ளது. கத்தி நல்ல வேலையாக நுரையீரல் போன்ற பிற உறுப்புகளை பாதிக்காத நிலையில், அறுவை சிகிச்சை செய்து கத்தியை வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இதனையடுத்து இந்த அறுவை சிகிச்சையானது தொடர்ச்சியாக 30 மணிநேரம் நடைபெற்ற நிலையில், உடலில் இருந்த கத்தியையும் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இதன்பின்னர் மல்லிகா கொஞ்சம் கொஞ்சமாக நலம்பெற துவங்கிய நிலையில், தற்போது முழு நலனுடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்த கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட உறவினரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore doctors remove knife form girl body


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->