கோவை மாவட்ட மக்கள் கேட்டதை செய்துள்ளோம் - முதல்வர் பெருமிதம்.!
Coimbatore District Developed ADMK Govt CM Pressmeet 5 November 2020
கோவையில் உள்ள விமான நிலையத்தில் தமிழக முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் கொரோனா பரவல் குறித்தும், நலத்திட்ட பணிகள் மேம்பாடு குறித்த ஆலோசனையில் கலந்து கொள்ள வந்துள்ளேன். வளர்ச்சி பணிகளை பொறுத்த வரையில் அதிமுக அரசு பல நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
பல வருடமாக கோவை மாவட்ட மக்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றி வருகிறோம். காந்திபுரம் இரண்டடுக்கு மேம்பாலத்தை ரூ.214 கோடி செலவில் கட்டி திறந்துள்ளோம். உக்கடம் மேம்பாலம் ரூ.120 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.
சுங்கம் சந்திப்பு மேம்பாலம் தேசிய நெடுஞ்சாலை ரூ.253 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது, கவுண்டம்பாளையம் மேம்பாலம் ரூ.63 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. கண்ணப்ப நகர் - கணபதி நகர் இரயில்வே மேம்பாலம் ரூ.16 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பால பணி ரூ.110 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. உக்கடம் ஆற்றுப்பாலம் பணி ரூ.265 கோடி செலவில் ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளது.
துடியலூர் - கோவில் பாதை சாலை ரூ.200 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கும். இதனைப்போன்று பல இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. நில எடுப்பு பணிகள் நடைபெற்று வரும் இடங்களில், நிலம் எடுத்தவுடன் பணிகள் துவங்கும். கோவை மாவட்ட மக்களுக்கு தேவையான அனைத்தையும் அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களுக்காக உழைத்து வரும் ஒரே இயக்கம் அதிமுக தான் " என்று பேசினார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Coimbatore District Developed ADMK Govt CM Pressmeet 5 November 2020