கோவை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா.. சோகத்தில் மாவட்ட மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசு பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றுவரை கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,47,324 ஆக உயர்ந்துள்ளது. பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 97,310 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 2,099 ஆக உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டத்தை பொறுத்த வரையில் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுக்குள் வைக்க பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் ராசாமணி தீவிர களப்பணியில் ஈடுபட்டு வந்தார். 

கோவை மாவட்டத்தில் 1,480 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,131 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளில் திறம்பட பணியாற்றி வந்த மாவட்ட ஆட்சியர் கொரோனா உறுதியாகியுள்ளது, மாவட்ட மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் அங்குள்ள கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore district Collector Rasamani Test positive corona virus


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->