கோவை: ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது பரபரப்பு புகார்.. சாதியை கூறி இழிவுபடுத்தல்...! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாமரைகுளம் தேவராயபுரம் ஊராட்சி மன்ற தலைவர், தன்னுடன் பணியாற்றிய வரும் துணைத் தலைவரின் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள புகாரில், 

" நான் தேவராயபுரம் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருகிறேன். நான் பழங்குடியின வகுப்பைச் சார்ந்தவர். எனது ஊராட்சியில் துணை தலைவராக இருப்பவர் கிருஷ்ணன். இவர் கொங்கு வேளாள கவுண்டர் சமுதாயத்தைச் சார்ந்தவர். 

ஊராட்சி மன்ற தலைவரான என்னை பணி செய்யவிடாமல், ஊராட்சி மன்ற துணை தலைவர் தடுத்து வருகிறார். எந்த ஒரு பணியையும் என்னை கேட்காமல் செய்யக்கூடாது என்று கூறி பிரச்சனை செய்து, சாதியை சொல்லி திட்டி வருகிறார். 

நான் ஊராட்சி மன்ற தலைவராக பணி செய்ய தகுந்த பாதுகாப்பை எனக்கு வழங்க வேண்டும். மேலும், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கிருஷ்ணன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரால் தற்போது வரை 10 க்கும் மேற்பட்ட அரசு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு, அதற்கான பணம் செலுத்தப்படாமல் இருக்கிறது " என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை செய்கையில், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகிய இருவரும் அதிமுக கட்சியினர் என்பதும் தெரியவந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Devarayapuram Village Administration Leader Complaint


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->