கூவி கூவி கூப்டுறது குத்தமா?.. என்ன ஆபிஸர்ஸ் இதெல்லாம்.. ஆனாலும் காண்டகுது.. கோவையில் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கோவையில் கடைவீதியில் நின்றவாறு வாடிக்கையாளர்களை ஜவுளி எடுக்க வர கூறி தொந்தரவு செய்ததாக விற்பனை பிரதிநிதிகள் 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 20 பேரை கையை பிடிச்சு இழுத்தியா என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

புத்தாடைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்ற பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி. இந்த காலகட்டத்தில் கடைவீதிக்கு வரும் வாடிக்கையாளர்களை தங்களுடைய கடைக்கு அழைத்துச் செல்வதற்கு ஒவ்வொரு கடையின் வாசலிலும் ஒரு பிரதிநிதியை நிறுத்தி வைத்து கையை பிடித்து இழுக்காத குறையாக ஆண்களையும், பெண்களையும் அழைப்பது வழக்கமான ஒன்றுதான். 

கோவை பெரியகடை வீதியில் நின்றுகொண்டு வாடிக்கையாளர்களை கையை பிடித்து இழுத்து அழைத்துச் சென்றதாக பெண் ஒருவர் போலீசில் வாய்மொழியாக புகார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வம்படியாக வாடிக்கையாளர்களை கடைக்குள் அழைத்துக் கொண்டிருந்த 20 விற்பனை பிரதிநிதிகளை காவல்துறையினர் அள்ளிப்போட்டுக்கொண்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். 

"கையை பிடித்து இழுத்தது யார்?" என்று காவல்துறையினர் கேள்வி கேட்க அவர்களிடம் இருந்து, 'இல்லை' என்று பதில் வந்தது. வணிகர் சங்கத்தில் ஒருவர் கூட கையை பிடித்து இழுத்ததாக புகார் அளிக்கவில்லை. சிசிடிவி ஆதாரங்களும் இல்லை. அப்படி இருக்கும் பொழுது காவல்துறையினர் எப்படி கையை பிடித்து இழுத்ததாக அவர்களை விசாரிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக கூறி 20 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து பின்னர் ஜாமீனில் வெளியே அனுப்பும் நிலை காவல்துறையினருக்கு ஏற்பட்டது. பெரிய கடைகளுக்கு தானாகவே வாடிக்கையாளர்கள் சென்று குவிவார்கள். சிறு ஜவுளிக் கடைகளை நடத்தி வரும் எங்களது வாழ்க்கை சக்கரம் இப்படி கூவிக் கூவி அழைத்தால் தான் வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்று சிறுகடை வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதற்கு காவல்துறையினர் வாடிக்கையாளர்களை வம்படியாக தொந்தரவு செய்வது தவறு தானே? விருப்பம் உள்ளவர்களை கடைக்கு அழைத்துச் சென்று வியாபாரம் செய்வது தான் நாகரிகமாக இருக்கும் என்று வலியுறுத்தி இருக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Deepawali sales Complaint Issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->