காம்ப்ளன் கொடுக்கும் பெற்றோர்களே.. சுதாரிப்புடன் செயல்படுங்கள்.. கோவையில் ஷாக்.!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தெலுங்குபாளையம் டெக்ஸ் டூல் காலனி பகுதியை சார்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சுகன்யா. இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கார்த்திக் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். 

இந்த தம்பதியினர் கடந்த மாதத்தில் அங்குள்ள செல்வபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருந்தகத்தில் குழந்தைக்கு கொடுக்க காம்பிளான் பவுடர் வாங்கியுள்ளனர். இந்த காம்பிளான் நேற்று முன்தினம் காலியாகியுள்ள நிலையில், கடந்த மாதம் ஏற்கனவே வாங்கியிருந்த மற்றொரு காம்பிளான் பாக்கெட்டை எடுத்து சிறுவன் ரித்திக்கிற்கு பாலில் கலந்து கொடுத்துள்ளார். 

இந்த நிலையில், இன்று காலை மீண்டும் சிறுவனிற்கு காம்பிளான் கொடுக்க பாக்கெட்டை திறக்கையில் பெரும் அதிர்ச்சியாக பல்லி இருந்துள்ளது. இதனைக்கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளான சுகன்யா, சிறுவனின் பாதுகாப்பு கருதி அங்குள்ள கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்துள்ளார்.

மேலும், இந்த விஷயம் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விஷயம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று பெற்றோர்கள் வற்புறுத்தியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Complan product Insects parents shocked


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->