80 முறை துவைத்து உபயோகம் செய்ய கூடிய பிபிஇ உடைகள்.. கோவை நிறுவனம் அசத்தல்.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவ பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் பிபிஇ முழு பாதுகாப்பு உடைகள் வழங்கப்படுகிறது. கொரோனாவின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் பிபிஇ உடைகளின் தேவையும் அதிகரித்துள்ளது. 

இதன் காரணமாக இந்தியாவிலேயே பிபிஇ கிட்கள் மற்றும் கையுறைகள், முக கவசங்கள், மருத்துவ பயன்பாட்டிற்கான பிற பொருட்களின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. பிபிஇ உடைகளை பொறுத்த வரையில், ஒருமுறை பயன்படுத்தி உபயோகம் செய்துவிட்டால், அதனை மீண்டும் உபயோகம் செய்ய இயலாது. மற்றொரு புதிய ஆடையினை அணிய வேண்டும். 

இதனால் பிபிஇ உடைகளின் தேவையானது தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், பலமுறை உபயோகம் செய்யும் வகையில் பிபிஇ உடைகளை கோவை ஜவுளி தொழிற்சாலை உருவாக்கியுள்ளது. மேலும், இந்த ஆடையினை சுமார் 80 முறை துவைத்து உபயோகம் செய்யும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக தொழிற்சாலையின் இயக்குனர் தெரிவிக்கையில், இந்த உடை 80 முறை துவைத்தாலும், துணியில் உள்ள குரோலின் ரீசார்ஜ் திறன் மூலமாக மீண்டும் உபயோகம் செய்து கொள்ளலாம். குளோரின் கிருமி நாசினி பண்புகள் கொண்டது ஆகும். இதன் மூலமாக ஒருமுறை துவைத்தால் கிருமி நாசினியின் தன்மை இரண்டு வாரங்கள் கூட அப்படியே இருக்கும். இதன் மூலமாக சுமார் 80 முறை இதனை துவைத்து உபயோகம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore cloth Industry discovers Wash and use PPE Dress


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->