15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம், கர்ப்பம்.. காதலன், 2 நண்பர்கள் என பொறுக்கிகளாக பள்ளி மாணவர்கள் 5 பேர்.. கோவையில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் கட்டிடத்தொழிலாளியின் 15 வயது மகள், அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில், சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து, சிறுமி அங்குள்ள கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். 

சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவிக்கவே, இது குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த மகளிர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இந்த நிலையில், சிறுமி கரோனா அச்சத்தின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற மறுப்பு தெரிவித்து, மாலையில் வீட்டிற்கு தப்பி சென்றுள்ளார். 

இதனையடுத்து காவல் துறையினர் சிறுமியின் இல்லத்திற்கு நேரடியாக விரைந்து மேற்கொண்ட விசாரணையில், பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பள்ளியில் சிறுமியுடன் பயின்ற மாணவர் தன்னை காதலிப்பதாக கூறிய நிலையில், அவனது நண்பர்களுடன் சேர்த்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இது குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளான். 

இந்த தகவலை அறிந்த அக்கம் பக்கத்தினரும், சிறுமி மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய எண்ணாது, சிறுமியை மிரட்டி அவர்களும் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் சிறுமி கர்ப்பமான நிலையில், கர்ப்பம் குறித்த விஷயத்தை சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்து வந்த நிலையில், தாயுடன் மருத்துவமனைக்கு சென்ற சமயத்தில் சிறுமி கர்ப்பமான விஷயம் தெரியவந்துள்ளது. 

இதன்பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தனசேகர் (வயது 23), கார்த்திக் (வயது 24), சிங்காநல்லூர் சந்தோஷ் (வயது 19) மற்றும் பதினோராம் வகுப்பு பயின்று வரும் நபர், பனிரெண்டாம் வகுப்பு பயின்று வரும் 4 பேர் என 8 பேரின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore child girl rapped by love boy and his friends


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->