அரசு பேருந்தில் அன்பான பேச்சு.. கொங்கு தமிழில், மக்களின் மனதை கவர்ந்த நடத்துனர்.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுண்டக்காமுத்தூர் இராமசெட்டிபாளையம் பகுதியை சார்ந்தவர் சிவசண்முகம். இவர் கோயம்புத்தூர் - மதுரை இடையே அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவர் பேருந்தில் வரும் பயணிகளிடம் நடந்துகொள்ளும் அணுகுமுறை வைரலாகி வருகிறது. பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அறிவுரை வழங்குதல், எந்த விதமான குணத்துடன் பேருந்தில் யார் பயணம் செய்ய வந்தாலும் எளிமையான முறையில் நடந்துகொள்ளுதல் என பணிவுள்ளவராக இருந்து வந்துள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக நடந்தனர் சிவசண்முகம் தெரிவிக்கையில், " பேருந்தில் நான் ஏறியதும், பயணிகளுக்கு எனது வேண்டுகோளை வைப்பேன். பயணிகள் அனைவரும் தங்களின் இனிமையான பயணத்தை மேற்கொள்ள, அரசு போக்குவரத்து கழகம் எங்களுக்கு மகத்தான வாய்ப்பை அளித்துள்ளது. அதற்கு நன்றி. 

நமது தமிழக அரசு நல்ல பேருந்தை வழங்கியுள்ளனர். அரசு பேருந்தை சுத்தமாக வைப்பது நமது கடமை. பேருந்தை பழுதாக்கமல் பார்த்துக்கொள்வது நமது கடமை. பேருந்தில் நீங்கள் சாப்பிட்டு மிச்சம் உள்ள கழிவுகள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை பேருந்தின் படிக்கட்டில் உள்ள பையில் வையுங்கள். பேருந்திற்கு வெளியே போட வேண்டாம். 

வாந்தி போன்றவை ஏற்படுவது போல இருந்தால், புளிப்பு மிட்டாய் மற்றும் அரசு அனுமதி செய்துள்ள பாலிதீன் பையை தருகிறேன். இந்த பேருந்தில் பல விஷயத்திற்காக பயணம் செய்யும் அனைவருக்கும், உங்களின் பயணம் மற்றும் உங்களின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள் என்று கூறுவேன். முகக்கவசம் அணியாமல் வந்தால், அவர்களுக்கு முகக்கவசம் வழங்குவேன் என்று தெரிவித்தார். இது குறித்த விடீயோவும் வெளியாகியுள்ள நிலையில், இதனை கண்ட அமெரிக்காவாழ் தமிழர் 15 அமெரிக்க டாலர்களை பரிசாகவும் அனுப்பி வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Bus Conductor SivaShanmugam Pleasant Speech


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->