பக்கத்து வீட்டுக்காரனால் வந்த வினை.. நாடகமாடி சடுகுடு விளையாட்டு.. ஒரே போடு.. பீச்சிட்ட இரத்தம்.! - Seithipunal
Seithipunal


கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் கள்ளப்பாளையம் கல்லுக்குழி பகுதியில், ஒடிசாவை சேர்ந்த சுதர்சன் என்ற 26 வயது நபர், தனது மனைவி சத்யா (வயது 23) என்பவருடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் இந்த பகுதியில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். 

இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ள நிலையில், இந்த தம்பதியின் வீட்டுக்கு அருகே பீகார் மாநிலத்தைச் சார்ந்த ரஞ்சித் என்ற 22 வயது வாலிபரும் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், ரஞ்சித்திற்கும் - சத்யாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, பின்னாளில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

இதனையறிந்த சுதர்சன் தனது மனைவியை கண்டிக்கவே, சத்யா இதனைப் பொருட்படுத்தாமல் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. ரஞ்சித் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சொந்த ஊருக்கு சென்று விட்ட நிலையில், மீண்டும் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கல்லுக்குழி பகுதிக்கு வந்துள்ளார். 

இதன்பின்னர், கள்ளக்காதலியின் இல்லத்திற்கு சென்று, அவரது கணவரிடம் சமாதானம் பேசிவிட்டு, நடந்தவற்றை எல்லாம் மறந்து நல்ல நண்பர்களாக இருப்போம் என்று ஆறுதல் தெரிவித்துள்ளார். இதனால் சுதர்சனும் சமாதானம் ஆகியதை தொடர்ந்து, இவர்கள் மூவரும் மது அருந்தியுள்ளனர். 

பின்னர், சுதர்சன் கோழிக்கறி வாங்க கடைக்குச் சென்ற நிலையில், சுதர்சன் வீடு திரும்பியபோது கள்ளக்காதல் ஜோடி மீண்டும் உல்லாசமாக இருந்துள்ளது. இதனையடுத்து பெரும் ஆத்திரத்துக்கு உள்ளாகிய சுதர்சன், அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். 

இதனால் படுகாயமடைந்த சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ரஞ்சித்துக்கும் பலத்த காயம் ஏற்படவே, அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதன் பின்னர் அங்கிருந்து சுதர்சன் தப்பி ஓடவே, சுதர்சன் தப்பியோடியதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று சோதனை செய்கையில், சத்யா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டுள்ளார். 

இது தொடர்பாக சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உயிருக்கு போராடிய ரஞ்சித்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சத்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சுதர்சனை தேடி வருகின்றனர். 

மேலும், சுற்றுவட்டார பகுதியில் வட மாநிலத்திலிருந்து வந்து தங்கி இருக்கும் பணியாளர்கள், இதுபோன்ற செயல்களில் அடிக்கடி ஈடுபட்டு கொலைகள் அரங்கேறுவது தொடர்கதையாகி உள்ளதால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Affair Murder police Investigation North Indian girl


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->