நெல்லை: 370 கோடியில் 3 கட்டங்களாக மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படும் - முதர்வர் ஸ்டாலின் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும், இந்நிகழ்ச்சியில் 156.28 கோடியில் 727 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதனை தொடர்ந்து, 74.24 கோடியில் முடிவற்ற 29 திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், 117.78 கோடி ரூபாயில் 30,658 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது,

"கடந்த ஓராண்டு காலத்தில் திமுக ஆட்சி, மக்களுக்கு மிக மிக பலனுள்ளதாக உள்ளது. 1113 பேர் இன்னுயிர் காக்கும் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற்றுள்ளனர். கூட்டுறவு சார்பில் 9389 விவசாயிகள் பயிர் கடன் பெற்றுள்ளனர். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 20 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 54917 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். மகளிர் இலவச பயண திட்டத்தில் 6 கோடி 92 லட் மகளிர் இதுவரை பயன்பெற்றுள்ளனர். ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிதாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 3421 பேர் நெல்லையில் பயன் பெற்றுள்ளனர்.

156 கோடி 28 லட்சல் மதிப்பில் இன்று 727 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். 74.24 கோடியில் முடிவுற்ற திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 30658 பயனாளிகளுக்கு 117.78 கோடி மதிப்பில் நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

நெல்லையில் 15 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. கருணாநிதியின் கனவு திட்டமான தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டம் வரும்  2023-ஆம் ஆண்டுக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இதன் மூலம் நெல்லை. தூத்துக்குடியில் 20,340 ஏக்கர் வேளாண் நிலம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும்.
 
திருநெல்வேலி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் மணிமுத்தாறில் சுற்றுச் சூழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் 7 கோடி ரூபாய் மதிப்பில் பல்லூயிர் சுற்றுச் சூழல் பூங்கா அமைக்கப்படும்.

வாழை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று களக்காட்டில் ஒருங்கிணைந்த வாழை ஏல மையம் அமைக்கப்படும். கடற்கரை கிராமத்தில் விளையாட்டு வீரர்களின் நலனுக்காக ராதாபுரத்தில் விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

நெல்லை மாநகர மேற்கு புறவழிச்சாலைக்கு நில எடுப்பு பணிகள் நடந்து வருகிறது. 370 கோடியில் மூன்று கட்டங்களாக மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படும். தமிழகத்திலையே முதல் முறையாக நெல்லையில்  கர்ப்பிணி பெண்களுக்காக தாய் கேர் திட்டம் கொண்டுவரப்பட்டது நெல்லையில் தான்.

தமிழக அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் இந்தியா முன்மாதிரி திட்டமாக அமைந்துள்ளது. நாம் அனைவரும் இணைந்து இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம். எனவே நீங்கள் தொடர்ந்து இந்த அரசுக்கு ஆதரவு தாருங்கள்". என்று தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm stalin announced nellai outer ring road


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->