தமிழகம் முழுவதும் 10,000 பி.பி.ஓ இடங்கள்..மதுரை, திருச்சிக்காக கடிதம் எழுதிய முதல்வர்! - Seithipunal
Seithipunal


இந்திய பி.பி.ஓ ஊக்குவிப்பு திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 10,000 இடங்களை ஒதுக்க வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளதாவது, பி.பி.ஓ ஊக்குவிப்பு திட்டம் தொடங்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இரண்டாம் நிலை மூன்றாம் நிலை நகரங்களில் பி.பி.ஓ தொழிலை தொடங்கும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு ஊக்கமளித்து வருவதாகவும். தமிழ்நாட்டில் பி.பி.ஓ திட்டத்தின் வெற்றி விகிதம் 93 சதவீதமாக உள்ளது என்றார்.

மேலும், தமிழகத்தில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்டமாக அமையவுள்ள 51 பி.பி.ஓ-க்களை 2ம் கட்ட பெருநகரங்களான திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் மத்திய அரசு அமைக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm palanisami write letter to union minister


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->