கோவிலுக்கு போன தமிழக பக்தர்களுக்கு கோர விபத்து.! 10 பேர் பலியான சோக சம்பவம்.! உடனடியாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் இரண்டு கார்கள் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் 10 பேர் பலியாகியுள்ளனர்.

ஓசூரை சேர்ந்த 10 பேர் தர்மஸ்தலா கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது கோவிலுக்கு சென்றுவிட்டு தரிசனம் முடிந்து இன்று அதிகாலை நேரத்தில் வீடு திரும்பியுள்ளனர். இதனை தொடர்ந்து, குனிக்கல் என்னும் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரே வந்த மற்றொரு காரின் மீது நேருக்குநேராக மோதியுள்ளது.

இதில் காரில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த 10 பக்தர்கள் உட்பட 13 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது. சாமி தரிசனம் முடிந்து வீடு திரும்பும்போது சாலை விபத்தில் பக்தர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், கர்நாடகாவில் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழக பக்தர்கள் 10 பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சமும்,   விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு 50,000  ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு,.  உயிரிழந்தவர்களின் 10 பேரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm palanisami relief amount for car accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->