தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி அமைச்சர்களுடன் திடீர் ஆலோசனை!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வறட்சி காரணமாக கடும் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே நடத்தியுள்ளார்.

தண்ணீர் இல்லாமல் மக்கள்., தொழிற்சாலைகள்., வணிக வளாகங்கள்., உணவு விடுதிகள் என்று அனைவரும் தவித்து வந்த நிலையில்., சென்னையில் உள்ள பெரும்பாலான உணவு கூடங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் மதிய சாப்பாடு உற்பத்தி நிறுத்தப்பட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும்., சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை வீட்டில் இருந்து பணி செய்ய அறிவுறுத்தியுள்ளது

இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஆய்வு செய்யவும், இனி மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யவும் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்த உள்ளனர் 

தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வரும் காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm discussion with ministers


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->