உயிரை பறிகொடுத்து, பெண்ணை காப்பாற்றிய வாலிபர்.! 10 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்த முதல்வர்.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் கொண்டஞ்சேரி என்ற கிராமத்தைச் சோ்ந்த யாகேஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுனராகப் பணிபுரிந்து வருகின்றார். இவர் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி தன்னுடைய ஊரில் இருந்துள்ளார். அப்போது ஷேர் ஆட்டோவில் இருந்து பெண் ஒருவரின் கதறல் சத்தம் கேட்டுள்ளது.

உடனடியாக நண்பர்களோடு அந்த ஆட்டோவைப் பிடித்துள்ளார். இதன் காரணமாக பயந்த ஷேர் ஆட்டோ டிரைவர் பெண்ணை தள்ளிவிட்டு விட்டு வேகமாக ஆட்டோவை ஓட்டி சென்றுள்ளான். பெண்ணை உடனே மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு ஆட்டோ ஓட்டுனரைப் பிடிக்க பைக்கில் சென்றுள்ளார் யாகேஷ்.

ஆட்டோவை முந்திசென்று பைக்கை அவர் நிறுத்தி ஆட்டோவை நிறுத்த சொல்லி இருக்கின்றார். ஆனால் ஆட்டோ ஓட்டுனர் வண்டியை நிறுத்தமல் ஆட்டோவை அவரின் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளாம்.

இதன் காரணமாக படுகாயமடைந்த யாகேஷ் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உயிரிழந்து இருக்கின்றார். தன்னுயிரை தியாகம் செய்துவிட்டு பெண்ணை காப்பாற்றியுள்ள இளைஞரின் வீரம் சிலிர்க்க வைக்கும் விதமாக இருக்கின்றது. 

இந்த நிலையில், பெண்ணை காப்பாற்ற பைக்கில் சென்று உயிரிழந்த யாகேஷ் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாயை நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm announced10 lakh for young boy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->