இரண்டு மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்.! மேலும் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார்.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி அளித்ததது. அதன்படி தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூா், நீலகிரி, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களுக்கு புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் ஆணை வழங்கியது.

இதில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை 10 மணி அளவில் அடிகல் நாட்டு விழா ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு மத்திய குடும்ப நல மற்றும் சுகாதாரத் துறைஅமைச்சர் ஹர்சவர்த்தன் தலைமை தாங்கினார்.

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவில் பங்கேற்று புதிய மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். இந்த புதிய மருத்துவக்கல்லூரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் 22 ஏக்கர் பரப்பளவில் 345 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ளது. 

இதையடுத்து, இன்று மாலை 3 மணிக்கு விருதுநகர் மாவட்ட மருத்துவக்கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கும் மத்திய சுகாதாரத் துறைஅமைச்சர் ஹர்சவர்த்தன் தலைமை தாங்கினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினர். இந்த மருத்துவ கல்லூரிக்கு 380 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளது.

இந்த விழாவில் பேசிய முதலமைச்சர், குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசி நகரமானது, விரைவில் மாநகராட்சியாக உதயமாகிறது. இதற்கான பணிகள் அனைத்தும் துவங்கி விட்டதாக அறிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சிவகாசி நகர உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக 50 கோடி ரூபாயையும் ஒதுக்கி உள்ளதாக தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm announced sivagasi has municipality


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->