பயிர்க்கடன் தவணை நீட்டிப்பு, வீட்டுவசதி தவணை நீட்டிப்பு.. முதல்வர் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பின் காரணமாக கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. 

இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே பல அறிவிப்புகளை மக்களுக்கு அறிவித்த நிலையில், தற்போது பயிர்க்கடன் மற்றும் பிற கடன்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதன்படி, கூட்டுறவு நிறுவனத்தில் பயிர்க்கடன் பெற்ற நபர்களின் தவணை தொகை செலுத்த கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு நிறுவனத்தில் பயிர்க்கடன் பெற்ற நபர்களின் தவணை தொகை செலுத்த 3 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

11 குழுக்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  வீட்டுவசதி கூட்டுறவு சங்க தவணை தொகை செலுத்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீடித்து அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான வீட்டு வாடகையை இரண்டு மாதம் கழித்தே வீட்டு உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்..

அத்தியாவசிய பொருட்கள் வாங்க அறிவிக்கப்பட்டுள்ள நடைமுறையை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.. வாகன ஓட்டுநர் உரிமம் இம்மாதத்துடன் முடிவடையும் பட்சத்தில், புதுப்பிக்கவும் கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஊரடங்கு முடிவடையும் நாளில் இருந்து மூன்று மாதத்திற்குள் புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM announce extend date for loan


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->