இரண்டு மயக்க ஊசிகள் போட்டும், அசராத சின்னதம்பி….! தொடரும் அட்டகாசம்…!  என்ன செய்யலாம்? என்று, தலையைப் பிய்த்துக் கொள்ளும் வனத் துறையினர்….! - Seithipunal
Seithipunal


 

கும்கி யானைகளின் உதவியுடன் டாப்சிலிப்பில் விடப்பட்ட, சின்னதம்பி யானை, மறு நாளே திரும்ப ஊருக்குள் வந்து விட்டது.

கடந்த ஒரு வார காலமாக, சின்னதம்பி யானை, உடுமலை, பழனி பகுதிகளில் உள்ள கரும்பு மற்றும் வாழைத் தோட்டங்களில் உலா வருகிறது.

ஏக்கர் கணக்கில் உள்ள கரும்புத் தோட்டத்தை, அழித்து சாப்பிட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த யானையை விரட்டும் படி, இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள், தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

வாழை, நெல், கரும்பு போன்ற பயிர்கள் எல்லாம், நாசமாகிக் கொண்டிருப்பதால், அதனைப் பயிர் செய்த விவசாயிகள் அனைவரும், கவலை அடைந்துள்ளனர்.

யானையை மீண்டும் காட்டுக்குள் விடும் முயற்சியும், தோற்றுப் போனது. நீதி மன்றமும், சின்னதம்பியின் உயிருக்கு சேதம் ஏற்படாமல், அதனைப் பிடிக்க வேண்டும், என்று உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், இன்று வனத்துறையினர், கும்கி யானைகளின் உதவியுடன், சின்னதம்பி யானைக்கு, இரண்டு மயக்க ஊசிகளைச் செலுத்தினர். ஆனால், இரண்டு மயக்க ஊசிகள், சின்னதம்பியின் உடலில் தைத்தும், மருந்து இறங்கியும், சின்னதம்பி, எந்த வித மயக்கமும் அடையாமல், மீண்டும் கண்ணாடிப்புத்துார் கரும்புக் காட்டிற்குள் பதுங்கி விட்டது.

இதனால், வனத் துறையினர், அடுத்து என்ன செய்வது? எப்படி சின்னதம்பியைப் பிடிப்பது? என்று தலையைப் பிய்த்துக் கொண்டு, ஆலோசனை செய்து கொண்டிருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து, வனத் துறையினர், கும்கி யானைகளுடன், சின்னதம்பியை, தொடர்ந்து கண்காணித்து, மீண்டும் மயக்க ஊசியைச் செலுத்தி, அதனைப் பிடிக்க முயற்சித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chinnathambi vs. Forest department


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->