கரோனாவால் கருணை கொலை முடிவு செய்யும் சீனா?.. சீனாவில் இருந்து வந்த தமிழரின் அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டினை மையமாக வைத்து பரவத்துவங்கிய கரோனா வைரஸானது உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி உள்ளது. தற்போது சீன நாட்டில் மட்டும் இந்த வைரஸின் தாக்கத்திற்கு 803 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸின் தாக்கம் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உட்பட சுமார் 25 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த நோயின் காரணமாக இந்தியாவின் கேரள மாநிலத்தில் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

பிற இந்திய மாநிலங்கள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புகள் நடைபெற்று வரும் நிலையில், சீனாவில் இருந்து தாயகம் திரும்பும் நபர்களுக்கு விமான நிலையத்திலேயே சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த சமயத்தில், நேற்று காலை நேரத்தில் டெல்லியில் இருந்து புனேவுக்கு ஏர் இந்திய விமானம் பயணிகளுடன் வந்து சேர்ந்த நிலையில், இந்த விமானத்தில் பயணம் செய்த சீன பயணி ஒருவருக்கு, பயணத்தின் போதே குமட்டல் ஏற்பட்டுள்ளது. இவர் தற்போது அங்குள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பின் கீழ் உள்ளார். 

இந்த நிலையில், சீன நாட்டில் இருந்து வரும் நபர்கள் அவ்வப்போது தெரிவிக்கும் பதில்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சீனாவில் இந்திய உணவகம் நடத்தி வரும் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த காரைக்குடி கீழாமலை கிராமத்தை சார்ந்தவர் கேசவன் (வயது 46). இவர் சென்னைக்கு திரும்பிய நிலையில், சீனா தொடர்பாக கேசவன் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீன நாட்டில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் உள்ளார், இதனைப்போல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2 மாதமாக கரோனா பாதிப்பு பலரையும் பலிகொண்ட நிலையில், சீனாவில் உள்ள பெரும்பாலான ஊர்களில் 144 தடை உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அரசின் அறிவிப்பு படி அசைவ உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், விசா காலம் நிறைவு பெற்றுள்ளதால் சீனாவில் உள்ள இந்தியர்கள் சீனாவை விட்டு வெளியேற வழிதெரியாது திகைத்து வருகின்றனர். இந்திய தூதரகமும் கைவிரித்துள்ளதால் சீன அரசு தண்டனை கொடுத்து சிறைக்கு அனுப்பினாலும் பரவாயில்லை என்று இந்தியர்கள் முடிவெடுத்து முடங்கியுள்ளனர். 

மத்திய அரசு அனைவரையும் காப்பாற்றி கொண்டு வர வேண்டும். சீனாவில் அண்டை நாடுகளும் எல்லையை மூடிவிட்டு நிலையில், சீனாவிற்கு உயில்லே செல்லவும் அனுமதியில்லை. மேலும், இரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து போன்ற பிரதான போக்குவரத்தும் பாதியாக குறைக்கப்பட்டு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், 20 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சீன அரசு கருணைக்கொலை செய்யும் அளவிற்கு நோயின் தாக்கம் உள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

china govt Kill mercy for carona virus affected peoples return tamilan says


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->