அடுத்தடுத்து அம்மா அப்பாவை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகள்.! கண்ணீருடன் விடுத்த வேண்டுகோள்!! - Seithipunal
Seithipunal


மதுரையில் வசித்து வந்தவர் சந்தானம். 45 வயது நிறைந்த இவர் ஜோதிடராக இருந்து வந்தார். இவரது மனைவி செல்லம்மாள். இவர்களுக்கு ஜெயச்சந்திரன் என்ற 15 வயது மகளும், ஜெயந்தி என்ற 13 வயது மகளும் உள்ளனர்.

 இந்நிலையில் செல்லம்மாள் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்துவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 4ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் மனமுடைந்த சந்தானம் தனது மனைவியின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல், வேதனையில் மூழ்கியிருந்த நிலையில் சமீபத்தில் உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து அவர்களின் குழந்தைகள் ஜெயசந்திரன் மற்றும் ஜெயந்தி இருவரும் ஆதரவின்றி தனியாக தவிர்த்துவருகின்றனர். மேலும் அவர்களுக்கு அவர்களது  தாத்தா மற்றும் பாட்டி ஆகியோர் துணையாக  இருந்துவருகின்றனர்.

இருப்பினும் வயதான அவர்களால் சிறுவர்களை கவனித்துக்கொள்ளவும் ,அவர்களின் படிப்பிற்கு செலவு செய்யவும் முடியவில்லை. இந்நிலையில் குழந்தைகள் உதவி கோரி நல்லஉள்ளங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஜெயச்சந்திரன் மற்றும் ஜெயந்தி கூறுகையில், தாய், தந்தையை இழந்து தனியாக தவிக்கும் எங்களால் விடுதியில் தனித்தனியாக வாழ முடியாது. எனது அம்மா மற்றும் அப்பா வாழ்ந்த இந்த வீட்டிலேயே இருந்து எங்களது கல்வியை தொடர விரும்புகிறோம். எங்களுக்கு உதவி செய்யுங்கள் என கூறியுள்ளனர்.இது  பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

English Summary

children wish after their parents dead


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal