2 ஆண்டு கடுங்காவல் தண்டனை.! குழந்தைத் திருமண தடைச் சட்டம்.! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்.!  - Seithipunal
Seithipunal



குழந்தைத் திருமணங்களை தடுப்பதற்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள தகவலில், "ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

1098 சைல்டு ஹெல்ப் லைன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் குழந்தைகள் நலக்குழு, மாவட்ட சமூக ஆர்வலர் ஆகியோர் ஒருங்கிணைந்து குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நயினார்கோவில், கமுதி, பரமக்குடி கீழக்கரை, திருப்புல்லாணி ஆகிய பகுதிகளில் அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் மகளிர் காவல் நிலையங்களில் குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குழந்தை திருமணங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப் பட்டும் நபர்களுக்கு ஜாமீனில் வர முடியாத இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும்,ஒரு லட்சம் அபராதமும் விதிக்க சட்டம் வழிவகை செய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் திருமணங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக கிராம ஊர் தலைவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், சமூக அளவிலான சங்கங்கள் மற்றும் ஜமாத் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் குழந்தைகள் திருமணம் தடுப்பு சட்டம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்து நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

குழந்தை திருமணம் என்பது சட்டப்படி குற்றமாகும். இந்தக் குழந்தை திருமணங்களை நடத்தும் பெற்றோர், மணமகன், மணமகள் வீட்டார் மற்றும் திருமணத்துக்கு உறுதுணையாக இருந்தவர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்." என்று அந்த தகவலில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

child marriage issue in ramanadhauram district


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->