விருதுநகரில் குழந்தையின் வாயிக்குள் புகுந்த கருவண்டு - சில நிமிடத்தில் அரங்கேறிய விபரீதம்..? நிம்மதி பெருமூச்சு விடவைத்த முயற்சி.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை கருவண்டை விழுங்கி இரத்த வாந்தி எடுத்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கணேஷ். இவருடைய 9 மாத குழந்தை வீட்டில் விளையாடி கொண்டிருக்கையில், திடீரென்று அலறல் சத்தம் கேட்டுள்ளது.

குழந்தை வீட்டில் விளையாடும் போது தரையில் ஊர்ந்து சென்ற கருவண்டை விழுங்கியதாக கூறப்படுகிறது.

விழுங்கிய சிறிது நேரத்திலேயே ரத்த வாந்தி போன்று வந்துள்ளது.வாயில் ரத்தம் வந்த படி குழந்தை மயங்கியதால் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் குழந்தையை  ஸ்கேன் செய்து பார்த்த போது குழந்தை வயிற்றில் கருவண்டு இருந்தது தெரியவந்தது.

சிக்கலான இந்த சிகிச்சையை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின்றி வாந்தி எடுத்தல் முறையை மேற்கொண்டு கருவண்டை வெளியே எடுத்தனர். இதற்கு பிறகு குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

English Summary

child inhale insect into mouth


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal