பிரதமர் மோடியை சந்திக்க தமிழக முதல்வர் இன்று டெல்லி பயணம்.! தமிழக பிரச்சனைகள் தீருமா மக்கள் எதிர்பார்ப்பு.!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் நாளை நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செல்கிறார். பாராளுமன்றத் தேர்தலில் பாஜக இரண்டாவது முறையாக மகத்தான வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. 

புதிய அரசு பதவியேற்ற பின்னர் முதல் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது இக்கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று மாலை 5 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளார் அவருடன் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் அதிகாரிகளும் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனியாக சந்தித்து பேசி உள்ளார். அப்போது தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் முக்கிய பிரச்சினைகள் குறித்த கோரிக்கை மனு அளிக்க உள்ளார். மேலும் 7 பேர் விடுதலை குறித்த பிரச்சனைகள் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief Minister of Tamil Nadu to meet Prime Minister Modi today People's expectations solve tn problems


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->