விஸ்வரூபம் எடுக்கிறது சிதம்பரம் நடராஜர் கோயில் சர்ச்சைக்குரிய திருமணம் விவகாரம்., களத்தில் உள்ளூர் மக்கள்..! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த சர்ச்சைக்குரிய திருமணம் நிகழ்வை பார்த்து பல விதங்களில் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரபல தொழிலதிபர்களின் இல்லத் திருமணம் ஆடம்பரமாக நடந்தது. இந்த நிகழ்வில் பிரபல பட்டாசு ஆலை அதிபர்(Standard group of companies Ltd) ராஜரத்தினம் & பத்மா தம்பதியினரின் மகள் சிவகாமிக்கும் பிரபல தொழிலதிபர்(Rathna stores) சிவசங்ர் & வாசுகி தம்பதியினரின் மகன் சித்தார்தனுக்கும் திருமணம் நடந்து முடிந்தது.

இதனால் சிதம்பரம் சுற்று வட்டார பகுதி மக்களையும் சிவ பக்தர்களையும் கடும் கோபத்திற்கு ஆளாக்கியது. மேலும் சிதம்பரம் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோயிலுக்கு வருவது குறைந்துள்ளதாக தெரிகிறது.

இதனை அடுத்து அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த செய்திகளில் தீட்சிதர்கள் பணம் பெற்றுக் கொண்டு இவ்வாறு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் உள்ளூர் மக்கள் திரண்டு துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் சார் ஆட்சியர்களிடம் புகார் மனு அளித்துள்ளனர். இந்த மனுவை VMS சந்திர பாண்டிய படையாண்டவர் அளித்தார் உடன் பால்ஸ்.ரவிக்குமார் மற்றும் உள்ளூர் மக்களும் வந்திருந்தனர்.

மனு அளித்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த VMS சந்திர பாண்டியன் கூறியதாவது "சமீபத்தில் நடந்த இந்த திருமணம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறியுள்ளது. மேலும் தீட்சிதர்கள் இவ்வாறு செய்தது கோயிலை மாசு படுத்திவிட்டனர்.

இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் உள்ளூர் மக்கள் திரண்டு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் செய்வோம். கோயிலை மீட்கும் வரை ஓய மாட்டோம்" என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chidambaram nadarajar temple marriage


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->