விவசாய பெண் ஒருவர் காலில் விழுந்து கதறி அழும் அதிர்ச்சி காணொளி!! கண்டுகொள்ளாமல் காரில் ஏறி செல்லும், அதிகாரி!! அரசாங்கம் மக்களுக்கானது தானா? - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே, இலங்கைச்சேரி கிராமத்தில் உள்ள, நீரோடை ஒன்றை ஆக்கிரமித்து செட்டிநாடு சிமெண்ட் ஆலைக்கான தார்சாலை அமைக்க முயன்று வருகின்றனர். 

இதனால், அப்பகுதி பொதுமக்கள் இதற்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். செட்டிநாடு சிமெண்ட் ஆலை தரப்பினரும் இதுகுறித்து வழக்கு தொடுத்துள்ளனர். 

அதனடிப்படையில் இருதினங்களுக்கு முன்பு  6.1.2019 அன்று, சென்னை உயர்நீதிமன்ற ஆணையர் களத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அக்கிராம மக்கள் தங்களுடைய விவசாய நிலங்களையும், ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும், இடுகாட்டுக்கு செல்லும் பாதையையும் ஆக்கிரமித்து உள்ளனர். 

"இந்த பகுதியில் கனரக வாகனங்களை கொண்டு சென்றால், எங்கள் நிலங்கள் வீண் ஆகிவிடும். முந்திரி உள்ளிட்ட எதையும் சாகுபடி செய்ய முடியாது எங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்படும். எங்களது நிலங்களை மீட்டு கொடுங்கள்' என கதறியபடி ஒரு பெண்மணி காலில் விழுந்து அந்த ஆணையரிடம் அழுகின்றார். இந்த காணொளி இனையதளத்தில் பரவி சர்ச்சையை கிளப்பி வருகிறது. 

மேலும், மக்களுக்கு சேவை செய்ய தானே அதிகாரிகள்., கண்முண்ணே ஒருவர் கதறி அழும் போது மெத்தனமாக காரில் ஏறிச்செல்வது சரிதானா? அவரின் அழுகுரல் காண்போரின் கண்ணை கலங்க வைக்கும் விதமாக உள்ளது. மேலும், அப்பகுதி வழியாக கனரக வாகனங்களை இயக்க அனுமதி வழங்கப்படவில்லை. உஞ்சினி, ஆதிகுடிக்காடு, இராயம்புரம் ஆகிய பகுதிகள் வழியாக வாகனங்களை இயக்கவே அரசிடம் அனுமதி பெற்றுள்ளனர். 

பின்னர் எதற்காக ஆலை நிர்வாகம், 'மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தே தீருவோம்' என  பிடிவாதம் காட்டுவது வேதனை அளிப்பதாக உள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் நிர்வாகமே இத்தகைய செயலை செய்வது மக்களுக்கு அநீதி இழைக்கும் செயல் சரிதானா?
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chettinad cement kills agriculture in ariyalur


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->