பூசாரியான சிறுவனுக்கு கல்வி வழங்க வேண்டும் -  சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில் கோயிலில் பூசாரியாக உள்ள 7 வயது சிறுவனுக்கு தடையில்லா கல்வி வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனே எடுக்க வேண்டும் என்று, சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோத்தகிரி பகுதியில் உள்ள கெத்தை அம்மன் கோயிலுக்கு 7 வயது சிறுவன் ஒருவன் பூசாரியாக நியமிக்கப்பட்டான். அந்த சிறுவனுக்கு உரிய கல்வி கிடைக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த உயர்நீதிமன்றத்தில், சிறுவன் தற்போது 3ஆம் வகுப்பு படிப்பதாகவும், கல்வி தடைபடவில்லை எனவும் தமிழக அரசு விளக்கம் அளித்தது.

இதனையடுத்து, சிறுவனுக்கு தடையில்லா கல்வி வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனே எடுக்க வேண்டும் என்று, உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும், சிறுவனின் கழிவு உள்ளிட்ட எந்த உரிமைகளும் மீறப்படுவதாக தெரிந்தால், மனுதாரர் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை அணுகலாம் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ChennaiHC order to TNGovt dec


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->