தந்தையின் நினைவாக இருந்த பைக் திருட்டு... இளைஞரின் விபரீத முடிவால் கண்ணீரில் குடும்பத்தினர்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள புரசைவாக்கம் பகுதியை சார்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகனின் பெயர் தியாகராஜன் (வயது 21). இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, அப்பகுதியில் உள்ள அலைபேசி கடையில் பணியாற்றி வரும் நிலையில், இவரது தந்தை ரூ.1 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை வாங்கி கொடுத்துள்ளார். 

இந்த நிலையில், ரவிச்சந்திரன் கடந்த சில மாதத்திற்கு முன்னதாக உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், தனது தந்தையின் நினைவாக இரு சக்கர வாகனத்தை பாதுகாத்து வந்துள்ளார். இந்த சமயத்தில், கடந்த 5 ஆம் தேதி வாகனம் வீட்டிற்கு முன் இருந்த நிலையில், மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இந்த விஷயம் குறித்து அங்குள்ள வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். கண்காணிப்பு காமிராவில் பதிவான கட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. 

தற்போது கரோனா தடுப்பு பணிகளின் காரணமாக இவ்வழக்கில் தொய்வு ஏற்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட நாட்கள் ஆகும் என்பதாக உணர்ந்த தியாகராஜன் மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளார். நேற்று மதியத்தில் போது திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்யவே, இது குறித்து தகவல் அறிந்த வேப்பேரி காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளையில், தந்தையின் நினைவாக இருந்த இரு சக்கர வாகனம் திருடு சென்றதில் இருந்து மனமுடைந்து இருந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சமயத்தில், அக்கம் பக்கத்தினர் காப்பாற்றியதும், ஊரடங்கு முடிந்ததும் காவல் துறையினர் வாகனத்தை கண்டறிந்து தருவதாக கூறிய நிலையில், இந்த துயரம் ஏற்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai youngster suicide his bike theft memorize of died dad


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->