சீட்டு விளையாட்டுக்கு ரூ.20 ஆயிரம் திருட்டு பணம்.. கல்லூரி மாணவரின் விபரீத முடிவு.. மக்களே உஷார்..!! - Seithipunal
Seithipunal


ஆன்லைனில் பணம் கட்டி விளையாடிய நபர், பணத்தை இழந்த விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் அரங்கேறியுள்ளது. 

சென்னையில் உள்ள அமைந்தகரை பகுதியை சார்ந்த இளைஞர் நிதிஷ். இவர் எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரியில் மூன்றாவது வருடம் பயின்று வருகிறார். இவர் அதிகநேரம் அலைபேசியில் செலவழித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், இவருக்கு இணையத்தளம் மூலமாக கேஷ் யூசர் ஓ கேஷ் (Cash User O Cash) என்ற சீட்டு விளையாட்டின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இதனை துவக்கத்தில் விளையாட்டுத்தனமாக விளையாட துவங்கிய நிலையில், அந்த செயலி விளம்பரத்தால் பணம் கெட்டும் சூழலுக்கு உள்ளாகியுள்ளார். 

இதனையடுத்து ரூ.20 ஆயிரத்தை உறவினரின் கடையில் இருந்து திருடி, அந்த சீட்டு விளையாட்டில் பணம் கட்டிய நிலையில், விளையாட்டில் தோல்வியை தழுவியுள்ளார். இதனால் பணத்தை எப்படி மீண்டும் கொடுப்பது?, பணத்தை கேட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துள்ளார். 

மேலும், சொந்த உறவினர்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்கள்?.. பெற்றோர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணி வருந்திய நிதிஷ், இரண்டு பக்கம் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், கல்லூரி மாணவர் நிதிஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளில் பல விபரீதங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இதனை தவிர்க்கும் முறைகளை அரசு கையாண்டு, இதுபோன்ற பல செயலிகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai youngster died Online rummy game money loss suicide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->