தமிழகத்திற்கு தென்மேற்கு பருவமழை தொடக்கம்.! வானிலை மையத்தின் அதிரடியால்., மகிழ்ச்சியில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த மாதத்தின் நான்காம் தேதி துவங்கிய அக்னி நட்சத்திரமானாது 29 ஆம் தேதி முடிந்தது. அக்னி நட்சத்திரம் முடிவடைந்து சுமார் 15 நாட்களுக்கும் அதிகமான நிலையில்., வெயிலின் தாக்கமானது குறையாமல் 105 டிகிரி முதல் 112.5 ஆக பதிவாகி மக்களை வாட்டி வதைத்தது. 

இந்த நிலையில்., பொதுவாக அக்னிக்கு முன் ஏழும் - பின் எழும் வெயிலின் தாக்கம் வழக்கமாக அதிகமாக இருக்கும் என்ற நிலையில்., வழக்கத்தை விட அதிக நாட்கள் கடந்தும் வெயிலின் தாக்கமானது அதிகளவு சுட்டெரித்து வருகிறது. 

பகல் வேலைகளில் வெளியில் சென்று வர மக்கள் பயந்து கொண்டு இருக்கும் காரணத்தால் சாலைகள் பெரும்பாலும் வெறிச்சோடியது., இதுமட்டுமல்லாது அனல் காற்றும் தொடர்ந்து வீசுவதால் மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் கடுமையாக போராடிக்கொண்டும்., இயற்கையான பானங்களை அதிகளவில் விரும்பி சாப்பிட்டும் வரும் நிலையில்., திடீரென வெப்பத்தின் காரணமாக அங்கங்கே ஏற்படும் மின்னழுத்த பிரச்சனைகளால் மின்சாரம் இன்றியும் தவித்து வருகின்றனர். 

வெப்பத்தின் தாக்கத்தை பொறுத்த வரையில் திருத்தணியில் சுமார் 108 டிகிரி செல்சியசும்., சென்னை மீனம்பாக்கத்தில் 107 டிகிரி செல்சியசும்., மதுரை மற்றும் திருச்சியில் 105 டிகிரி செல்சியசும்., சென்னை நுங்கம்பாக்கம் பகுதிகள், மதுரை தெற்கு பகுதிகள் மற்றும் நாகப்பட்டினத்தில் சுமார் 104 டிகிரி செல்சியசும்., கடலூர் மற்றும் புதுச்சேரியில் 103 டிகிரி செல்சியசும்., பாளையங்கோட்டையில் சுமார் 102 டிகிரி செல்சியசும்., தூத்துக்குடியில் சுமார் 101 டிகிரி செல்சியசும்., நாமக்கல்., பரங்கிப்பேட்டை., சேலம் மற்றும் காரைக்காலில் சுமார் 100 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவானது.

இந்த நிலையில்., அரபிக்கடல் பகுதியில் உருவான வாயு புயலானது சில நாட்களில் வலுவிழந்த பின்னர்., இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்ப நான்கு நாட்கள் கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் என்றும்., இதற்கு பின்னர் தென்மேற்கு பருவமழைக்கான காற்று வீச துவங்கி., தமிழகத்திற்கு மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. இதுமட்டுமல்லாது தமிழகத்தில் இனி வரும் நாட்களில் மழை பெய்யும் பட்சத்திலேயே., வெப்பமானது குறையும் என்றும் அறிவித்துள்ளது.

English Summary

chennai weather report announce to rain after vau cyclone finish


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal