அடுத்தடுத்து 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையை கொட்டி தீர்க்கபோகும் மழை.! வானிலை மையம் வெளியிட்ட அல்டிமேட் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு பருவமழையானது கேரள மாநிலத்தில் நேற்று துவங்கியது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கினாலும்., தமிழகத்தை பொறுத்த வரையில் வெயிலின் தாக்கமானது குறையாமல்., மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையை பொறுத்த வரையில்., கோடை வெயிலானது தொடர்ந்து வாட்டி வதைத்து வரும் நிலையில்., சில இடங்களில் மழை பெய்தது. 

இதுமட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள சில இடங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அரபிக்கடல் பகுதியில் தென்மேற்கு பருவக்காற்றின் வலுவடைந்த நிலையின் காரணமாக., தெற்கு அரபிக்கடல் பகுதி., இலட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் மேகங்களின் கூட்டமானது அதிகரித்துள்ளது. 

இதன் காரணமாக கேரளாவில் பருவமழை துவங்கியுள்ள நிலையில்., வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்திலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்தின் காரணமாக ஈரோடு., சேலம்., நாமக்கல்., நீலகிரி., கோயம்புத்தூர்., தேனி., திண்டுக்கல்., மதுரை, திருநெல்வேலி., விருதுநகர்., சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய நல்ல மழை பெய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தலைநகர் சென்னையை பொறுத்த வரையில் அதிகபட்ச வெப்பநிலையாக 100.4 டிகிரி செல்சியஸ் பதிவாக வாய்ப்புள்ளதாகவும்., வெயிலின் தாக்கம் குறைவதற்கு குறைந்தது ஒரு வார காலம் எடுக்கும் என்றும்., தென்மேற்கு பருவமழை தமிழகத்திற்கு இயல்பான அளவிலான மழையை வழங்கும் என்றும் அறிவித்துள்ளது. 

இன்று காலையுடன் சுமார் 24 மணிநேரம் முடிவடைந்த நிலையில் கீரனூரில் சுமார் 6 செ.மீ மழையும்., பாப்பிரெட்டிப்பட்டி., மதுரை மற்றும் திருமங்கலத்தில் சுமார் 4 செ.மீ மழையும்., பவானி மற்றும் பெருந்துறையில் சுமார் 2 செ.மீ மழையும்., மணப்பாறை., ஒகேனக்கல்., மேலூர்., சேலம்., கொடுமுடி., அரூர்., வால்பாறையில் சுமார் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai weather report announce rain due to heatwave tamilnadu south west monsoon


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->