5 நொடி இப்ப லேட் ஆகுது - நடிகர் மற்றும் சுயேட்சை வேட்பாளர் மயில்சாமி பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் காலை 7 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக வாக்காள பெருமக்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்ய காலை முதலாகவே வாக்குச்சாவடி மையங்களுக்கு வருகை தந்து வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். 

கொரோனா பரவல் காரணமாக முகக்கவசம் உட்பட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை இராணுவ படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். 

விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கியுள்ள நடிகர் மயில்சாமி தனது வாக்குகளை பதிவு செய்து செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " எனது வாக்குகளை நான் பதிவு செய்துவிட்டேன். விருகம்பாக்கம் தொகுதியின் வேட்பாளர் என்ற முறையில் அணைத்து பூத்திலும் சோதனை செய்கிறோம். 

வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்து, அந்த பீப் ஒலி கேட்கிறதா? என்பதை சோதனை செய்துகொள்ளுங்கள். 5 வினாடிகள் கழித்து பீப் சத்தம் கேட்கிறது. வாக்குகளை செலுத்துபவர்கள் உங்களுக்கான பூத் எண்ணை சோதனை செய்துகொள்ளுங்கள். 

நான் முதல் முறையாக விருகம்பாக்கம் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளேன். பேப்பரில் வாக்களிகையில் தேர்தல் முடிவு வர நாட்கள் ஆகும் என்று இயந்திரம் கண்டுபிடித்தோம். ஆனால், இன்று தேர்தல் முடிவுகள் வரவே தாமதமாகிறது. 

வாக்குகளை செலுத்துகையில் அல்லது செலுத்த வருகையில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். உங்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். கொரோனா வழிமுறைப்படி பாதுகாப்பாக வாக்குகளை பதிவு செய்யுங்கள் " என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Virugambakkam Independent Candidate Actor Mayilsamy Pressmeet 6 April 2021 TN Election 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->